பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற காஞ்சி வீராங்கனை... - குவியுது வாழ்த்துகள்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் பேட்மிட்டன் போட்டி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசி மதி முருகேசன் .
பாரிஸ் பாராலிம்பிக்கில் பெண்கள் பேட்மிட்டன் இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் கால்நடை மருத்துவ மாணவி துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் துறையின் ஒத்துழைப்பே தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை கொள்ள வைத்தது என பெற்றோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் பல நாடுகளில் இருந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகளான துளசிமதி பெண்கள் பேட்மிட்டன் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று உள்ளார். கால்நடை மருத்துவரான இவர் சிறு வயது முதலே பேட்மின்டனில் சிறந்து விளங்கி நூற்றுக்கணக்கான கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பாரிஸ் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க கடந்த இரு மாதங்களாக ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
கால்நடை மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் துளசிமதி இந்த பயிற்சியில் பங்கேற்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு நிலையில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு செய்துள்ளார். இதன் மூலம் மகிழ்ச்சியாக விளையாடிய அவர் பல்வேறு வீராங்கனைகளை வென்று இன்று இறுதியாக இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை எதிர்கொண்டார்.
தங்கம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று காஞ்சிபுரம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஆர்வமாக இருந்த நிலையில் சீன வீராங்கனை இடம் 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி உற்ற நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெருமையை அளித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு தங்கம் வெல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ள அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் உள்ளிட்டவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக துளசிமதி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu