பாரா பேட்மிண்டன் வீராங்கனை அமுதாவின் 'நம்பிக்கையை' தூக்கி நிறுத்திய 'கால்'..!

பாரா பேட்மிண்டன் வீராங்கனை அமுதாவின் நம்பிக்கையை தூக்கி நிறுத்திய  கால்..!
X

முதல்வரிடம் வாழ்த்து பெறும் பாரா பாட்மிண்டன் வீராங்கனை அமுதா 

பாரா விளையாட்டு வீரர்கள் - மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி மிக்க வெற்றிக்கான இடைவிடாத அழியாத நெருப்பின் உருவகமாக நிற்கும் நபர்கள்

பாரா விளையாட்டு வீரர்கள் தைரியம், மன உறுதி, தன்னம்பிக்கை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் போட்டி என்று வந்துவிட்டால் அவர்கள் அணையாத நெருப்பு போல சீறி நிற்கிறார்கள். அவர்கள் இதை செய்தார்களா என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

நாம் அனைவரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கையின் நோக்கமே கேள்விக்குறியாகும்போது, ​​நம்மில் எத்தனை பேர் நோக்கத்திற்கான பதில்களைக் தேடுகிறோம்? பாரா தடகள வீரர்கள் ஒரு வித்தியாசமான படைப்பை பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சமாதானத்தையும் சமரசமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். மாறாக அவர்களின் மன உறுதியின் மூலம், மனிதநேயமற்று இருப்பவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் குறைபாட்டை தூக்கி எறிகிறார்கள். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரிகளாக அவர்கள் விளங்குகின்றனர்.

எனது நம்பிக்கையை கழட்டி வைக்கவில்லை

அப்படிப்பட்ட ஒரு சூப்பர்வுமன் தான் அமுதா. நாமக்கல் மாவட்டம் கொமரபாளையத்தைச் சேர்ந்த அமுதா, 5 வயதாக இருக்கும்போது ஒரு விபத்தில் வலது காலை இழந்தார். அவரது தாய், வீட்டு வேலை செய்பவர். தந்தை விசைத்தறி நெசவாளர். இதில் இருந்தே அவரது குடும்ப நிலை உங்களுக்கு தெரிந்திருக்கும். ஈரோடு அரிமா டிரஸ்ட் சிறப்புப் பள்ளியில் அமுதா பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப் படிப்பின் பிற்பகுதியில், பேட்மிண்டன் விளையாட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து அவருக்கு பேட்மிண்டன் விளையாடுவதில் தனி ஆர்வம் ஏற்பட்டது.

போட்டியின்போது அமுதா

அவருடைய முயற்சிகளைப்பற்றி அறிந்ததும், அவரது திறமையையும் ஆர்வத்தையும் எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை அறிய, நான் அவரை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு சில விஷயங்கள் புரிந்தது. பாரா பேட்மிண்டனில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவதற்கான திறமை, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பும் அவரிடம் வேறொரு லெவலில் இருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு பயிற்சியாளரால் அடையாளம் காணப்பட்டு, இப்போது அவரது பயிற்சி ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான கோபிசந்த் அகாடமியில் நடந்து வருகிறது.

அவர் பயிற்சியில் சேர்ந்த காலகட்டத்தில் அவருக்கு தேவையானதெல்லாம் ஒரு அடிப்படை செயற்கை கால் மட்டுமே. ஆனால், பிரத்யேகமான பிளேடுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் செயற்கை கால்கள் ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், அந்த வகை கால்களே அவரை வேகமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தவும், மேலே குதிக்கவும் முடியும். அப்போதுதான் அவருக்கு களத்தில் சரி நிகர் போட்டியை சமாளிக்க உதவும்.

பயிற்சியாளர் புல்லேல கோபிசந்த் -உடன் அமுதா.

அமுதா தற்போது பயிற்சி பெறும் இடம் நம் நாட்டிற்கு சிறந்த சாம்பியன்களை உருவாக்கித்தரும் இடம். அமுதாவின் வெற்றியில் அவர்களின் உறுதியும் அர்ப்பணிப்பும் நம்மை வியக்க வைக்கிறது. அகாடமியில் அமுதா தங்குவதற்கும்,பயிற்சி பெறுவதற்குமான முழுப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். நம் நாட்டின் சிறந்த பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற அமுதாவுக்கு இடம் கிடைத்திருப்பது ஒன்றே அவரிடம் இருக்கும் திறமைக்கான சான்று. ஆகவே, அவருக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது.

அமுதா தொழில்முறையில் ஒரு சிறந்த பாராபேட்மிண்டன் வீராங்கனையாக உருவாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. முதலில் அவருக்கு ஒரு செயற்கை ஸ்போர்ட்ஸ் கால் வாங்கியாக வேண்டும். அதற்கு பணம் மிக முக்கிய தடையாக இருந்தது. வழக்கம் போல் காலம் போய்க்கொண்டிருந்தது. அதற்கு சில லட்சங்கள் செலவாகும். கிடைத்துவிட்டால் அவர் பயிற்சி பெற்று, போட்டியில் பங்கேற்காத தொடங்கலாம்.

பயிற்சியின்போது அமுதா.

நாங்கள் விரைவாக அதைச் செய்யத் தொடங்கினோம். ஹைதராபாத்தில் ஒரு உற்பத்தியாளர் அடையாளம் காணப்பட்டார். உடனே முழுத் தொகையையும் ஸ்பான்சர் செய்ய முடிவு செய்தேன். சில மாத ஆவலான காத்திருப்புக்குப் பிறகு, 2021ம் ஆண்டு அக்டோபரில் அமுதா தனது புதிய செயற்கைக் கால்களை அணிந்தார். அந்த நாள் எங்களுக்கு மிகவும் அற்புதமான தருணம்.

2021ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உகாண்டா சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் விளையாட அமுதா தேர்ந்தெடுக்கப்பட்டார். எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உடனடி பலனைத் தந்தன. கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நம் அனைவரையும் மகிழ்வித்தார். இது அவரது முதல் சர்வதேசப் போட்டியில் சூப்பர் ஸ்டார்ட் ஆகும். உண்மையில் நமது தமிழக பாரா விளையாட்டு வீரர்கள் பலர் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களையும் கௌரவங்களையும் வென்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்தக் குழுவும் நமது முதல்வரைச் சந்தித்தனர். முதலமைச்சரும் அவர்களை வாழ்த்தி கௌரவித்தார்.

அதன்பிறகு, அவர் டிசம்பரில் ஒடிசாவில் நடந்த 4வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அங்கு அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று தேசிய சாம்பியனானார். ஒரு பாரா தடகள வீராங்கனை தனது கனவை நனவாக்கத் தொடங்குவதையும், வாழ்க்கையில் சிறந்த நோக்கத்தைக் கண்டடைவதையும் நாம் காணும்போது, ​​இது உண்மையிலேயே உணர்ந்து அனுபவிக்க வேண்டிய தருணம். எனது முயற்சிகள் குறைவாக இருந்தபோதிலும், இது எனக்கும் ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது.

அமுதா, இந்த வெற்றிகளுக்குப் பிறகு தன்னம்பிக்கை உடையவராகவும், நேர்மறை சிந்தனை மற்றும் முதிர்ச்சி பெற்றவராக இருக்கிறார். மேலும் தனது ஆட்டத்தையும், திறமையையும் மேம்படுத்த இன்னும் கடினமாகப் பயிற்சி எடுத்து வருகிறார். அத்தகைய ஒரு தொழில்முறை குழு அவருக்குப் பக்கபலமாக இருந்தால், அவரது சாதனைகள் இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். வரும் நாட்கள்.

சரியான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது வெற்றிகரமான சமுதாயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், எந்தத் துறையிலும் வெற்றியாளர்களை உருவாக்க முடியும். இந்த திறமைகள் அனைத்தும் அந்த ஆரம்ப உந்துதலையும் வழிகாட்டுதலையும் தேடும். நமது தேசம் பெரியது. அதிக மக்கள் தொகை கொண்டது. அதில் திறமையானவர்களை அடையாளம் கண்டு ஆதரிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனாலும் அத்தகைய திறமையாளர்களை ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதுவே தகுதியான திறமைசாலிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எனது சிறிய முயற்சியாக அமையும். இந்த முயற்சிகள் எனது சமுதாயத்திற்கும்,தேசத்திற்கும் சேவையாற்றும் தூண்டுதலையும்,நிறைவையும் எனக்கு அளிக்கின்றன.

அமுதாவின் திறமைகளை கண்டறிந்து அவரை தேர்வு செய்து,திறமைமிக்க பேட்மிண்டன் வீராங்கனையாக உருவாக்கிய மன நிறைவான பணியாக கருதுகிறார், பயிற்சியாளர் புல்லேல கோபிசந்த்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!