பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசம்

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசம்
X

பைல் படம்.

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் திருவிழா நாட்களில் மட்டுமல்லாமல், முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்களில் ஒன்றான பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம்.

கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த பச்சாமிர்தம் மலைக்கோவில் உள்ளிட்ட அடிவாரம் பகுதிகளில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனியில் அனைத்து பக்தர்களுக்கும் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

பக்தர் ஒருவருக்கு பேப்பர் கப்பில் தலா 40 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!