பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? -வால்டர் தேவாரம் (பகுதி10)

பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? -வால்டர் தேவாரம் (பகுதி10)
X
பிரபாகரன்.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? என்பது பற்றி வால்டர் தேவாரம் பகுதி10ல் கூறி உள்ளார்.

தமிழக காவல்துறையில் போலீஸ் சூப்பிரண்டு முதல் காவல்துறை தலைவர் எனப்படும் டி.ஜி.பி. வரை பதவியில் இருந்து விட்டு பணி ஓய்வு பெற்றுள்ள வால்டர் தேவாரம் தனது பணி காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் பற்றிய செய்தி தொகுப்பினை 'இன்ஸ்டா நியூஸ்' இணைய செய்தி தளம் தொடராக வெளியிட்டு வருகிறது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக தேவாரம் பணியாற்றிய போது சென்னை சூளைமேடு பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய ஒரு துப்பாக்கி சூடு சம்பவம், அதில் ஒருவர் உயிர் இழப்பு, அதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை அந்த சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தா (இவர் பின்னாளில் இலங்கையில் அமைச்சர்) என்ற போராளி குழு தலைவரை கைது செய்தது எப்படி என்பது பற்றி நேற்றைய பகுதி 9 தொகுப்பில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை வால்டர் தேவாரம் கைது செய்தது எப்படி என்பது பற்றி இன்றைய தொகுதி 10-ல் காணலாம்.

சென்னையில் இலங்கை தமிழ் போராளி குழுக்கள் பல முகாமிட்டு இருந்தாலும் அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். அவரது போராளி குழு மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்ததே அதற்கு காரணம்.

சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் இலங்கை தமிழ் போராளி குழுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. முதல் கட்டமாக அவர்கள் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ஏற்று பல போராளி குழுவினரும் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும் அவருடன் இருந்த முக்கிய தளபதிகள் மட்டும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. இது அரசுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அந்த நேரத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த வால்டர் தேவாரம் அரசு உத்தரவின் படி அவர்களிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களை ஒப்படைக்க செய்ய மேல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதற்காக சென்னையில் பிரபாகரன் தங்கி இருந்த இடத்திற்கு வால்டர் தேவாரம் சென்றார். ஆனால் அவர் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இல்லை. நேரடியாகவே பிரபாகரனை சந்திக்கச் சென்றார். பிரபாகரன் தரப்பில் வெளியே வந்த ஒரு பிரதிநிதி வெளியே வந்தார். அவரிடம் அரசின் உத்தரவு பற்றி தெரிவிக்கப்பட்டது. முதலில் அவர்கள் தயக்கம் காட்டினார்கள். அந்த தயக்கத்தை புரிந்து கொண்ட வால்டர் தேவாரம் அரசின் உத்தரவுக்கு கீழ்படியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும் என எச்சரிக்கை விடுக்கும் பாணியில் பேசினார்.

இதனை தொடர்ந்து பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் போன்ற முக்கிய நிர்வாகிகளும் தங்களது துப்பாக்கி உட்பட அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்து தேவாரத்திடம் சரண் அடைந்தனர்.இதனை தொடர்ந்து வால்டர் தேவாரம் பிரபாகரனையும், அவரது இயக்கத்தின் முக்கிய தளபதிகளையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட பின் அவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர். பிரபாகரன் தமிழக காவல்துறையால் ஒரே ஒரு முறை மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதுவும் வால்டர் தேவாரத்தால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழக காவல்துறையில் பல வீர, தீர சவாலான பணிகளை செய்த வால்டர் தேவாரம் ஒரு முறை தமிழக சட்டசபையில் துப்பாக்கி போலீஸ் படையுடன் நுழைந்தது பெரிய சர்ச்சையானது. எதற்காக சட்டசபைக்குள் தேவாரம் புகுந்தார் ?அன்று நடந்தது என்ன என்பது பற்றி நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்).

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!