பான்கார்டு மோசடி தவிர்ப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

Online Tamil News
X
உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

உலகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்ததன் விளைவாக நம் நாட்டில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மிகப்பெரிய அளவிலான இலக்கை அடைந்துள்ளது.

அதே வேளையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சில சட்ட விரோத பண மோசடிகளுக்கும் வழிவகுக்குகிறது. உதாரணமாக ஏடிஎம் கார்டு எண்ணை பயன்படுத்தி ஓடிபி மூலம் நடைபெறும் பண மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் பான் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோர் இந்த மோசடியில் சிக்கியதாக தக்வல் வெளிவந்தது. அதேபோல் நடிகர் ராஜ்குமார் ராவ், ஃபின்டெக் மொபைல் செயலி மூலம் தனிநபர் கடன் பெறும் வழக்கில் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்திருந்தார்.

இதேபோன்ற மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகாமல், உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் உங்கள் பான் எண்ணை பயன்படுத்தி சிபில் (CIBIL) ஸ்கோரை சரிபார்க்கவும். இதற்கு CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தி சிபில் ஸ்கோரைச் சரிபார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் பெயரில் ஏதேனும் தவறான கடன் வாங்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரிய வரும். தவறான கடன் வாங்கப்பட்டிருந்தால், அதுவும் எளிதாகக் கண்டறியப்படும்.

இதுதவிர பேடிஎம் அல்லது பேங்க் பஜாரிலிருந்தும் பான் கார்டு தகவலைப் பெறலாம். உங்கள் பான் கார்டு எண்னை வைத்து வாங்கப்பட்ட கடன் பற்றி அறிய அல்லது உங்கள் பான் கார்டு மோசடி தொடர்பான தகவல்களைப் படிவம் 26A -வை ஆராய்ந்தும் அறிந்து கொள்ளலாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!