எங்கள் கைகள் பூப்பறிக்காது: முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!
முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஜெயக்குமார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோஷம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இடைப்பாடி பழனிச்சாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என இரு முனைப்போட்டி நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அ,தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் மனநிலை என்ன? அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
ஒற்றை தலைமை குறித்து தொண்டர்கள் எண்ணங்களை நான் சொன்னேன். சிதம்பர ரகசியத்தை கூறவில்லை. தலைமை குறித்து வெளியில் பேசியதற்கு சிலர் காட்டும் பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படுபவன் அல்ல. என்னை யாரும் முற்றுகையிடவோ, தாக்கவோ இல்லை. அப்படி ஏதும் நடந்தால், எங்கள் கைகள் ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிருக்காது.
தலைமை குறித்த இறுதி முடிவு கட்சி தான் முடிவு செய்யும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் தான் தலைமை குறித்து தீர்மானிப்பார்கள். மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu