/* */

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலைக்கு 'ஆரஞ்சு அலர்ட்'

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட்
X

வானிலை ஆய்வு மைய மழை விபர வரைபடம்.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

02.11.2021.03.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை ) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி) மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.11.2021; செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், | காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

05.11.2021,06.11.2021; திருவள்ளூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

Updated On: 3 Nov 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!