டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': 5 நாட்களுக்கு மிக கனமழை

டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: 5 நாட்களுக்கு மிக கனமழை
X

(மாதிரி படம் )

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு அலர்ட்': விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.

வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக்கோள் படத்தின் அனிமேஷன்.

இதன் காரணமாக 31.10.2021 முதல் 02.11.2021 வரை: (ஆரஞ்சு எச்சரிக்கை ) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.11.2021, 04.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை ) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story