அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ். அழிக்க பார்க்கிறார்- எடப்பாடி பழனிசாமி பேச்சு
திருச்சியில் நடந்த பிரமாண்ட அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் விமான நிலையம் எதிரே வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஒரு இயக்கம். அ.தி.மு.க.வை புரட்சித்தலைவர் எம்.ஜிஆ.ர். உருவாக்கினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்தார். இந்த இரண்டு பேரும் முதலமைச்சராக இருந்த போது ஆட்சியில் அடித்தளமிட்ட திட்டங்களால் தான் தமிழகம் இன்று சிறப்பாக உள்ளது. தமிழகம் ஒளிமயமாக மின்னிக் கொண்டு இருந்தது.
ஆனால் விடியா தி.மு.க.அரசு ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்றதும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்துகிறது. தவிர ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் பலவற்றை முடக்கி விட்டார்கள். இதுதான் இந்த விடியா அரசின் சாதனை. 15 மாதகால தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேட்க விரும்புகிறேன். அவர் கூறுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது என்பது தான்.
அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு காட்டலாம்.எத்தனையோ உள்ளன. வெள்ளப்பெருக்கின் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் கதவணை உடைந்த போது ரூ.385 கோடியில் பிரம்மாண்ட அணை கட்டுமான பணி உடனடியாக தொடங்கியது. அதனை விரைவாக திறந்து வைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது மட்டுமல்லாமல் அய்யன் வாய்க்காலில் பாலம் சத்திரம் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது தான். அதனை இவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால் தான் 15 மாத கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் நிதி இல்லை என்கிறார்.நிதி இல்லை என்று தெரிந்து தானே நீங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசினீர்கள்.நிதி இல்லாத இந்த நேரத்தில் கருணாநிதியின் பேனாவிற்கு ரூ. 80 கோடியில் சிலை வைக்க வேண்டுமா? ஒரு கோடியில் வைத்தால் போதாதா? இந்த ரூ.80 கோடியை கொண்டு ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் பேனா வாங்கி கொடுக்கலாமே. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதில் மிக முக்கியமானது. மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் தருவேன் என்று கூறினார் தந்தாரா? இதுவரை தரவில்லை. மக்கள் கேட்கிறார்கள் பெண்கள் உரிமையுடன் கேட்கிறார்கள். உரிமைத்தொகை என்ன ஆனது என கேட்கிறார்கள். அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்.
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட மக்கள் இயக்கம். அதனை யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. அவருக்கு (ஓ.பி.எஸ்)நாங்கள் உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்த்தோம். அவர் அ.தி.மு.க.வுடன் இணைந்த போது 10 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் 10 எம்.எல்.ஏ.க்களும் தான் அவருடன் இருந்தார்கள். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தோம் .அதற்கு முன் அவர் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சர் ஆகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். ஆனால் அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை. கட்சிப் பதவியை வியாபாரமாக கருதினார். அவரிடம் துரோகம் மனப்பான்மை தான் உள்ளது. அ.தி.மு.க. தலைமை நிலைய அலுவலகத்தை டெம்போ வேனில் வந்து உடைத்தார். அம்மா இருந்த அறையை அடித்து நொறுக்கினார்.இப்படி கட்சிக்கு துரோகம் செய்தவருடன் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்? அ.தி.மு.க. தலைமைக்கு விசுவாசமாக இல்லாத ஒருவருடன் இணைய முடியுமா? தொண்டர்களேநீங்கள் சொல்லுங்கள். யார் கட்சிக்கு விசுவாசமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியும் .
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட மக்கள் இயக்கம். அதனை யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. அவருக்கு (ஓ.பி.எஸ்)நாங்கள் உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்த்தோம். அவர் அ.தி.மு.க.வுடன் இணைந்த போது 10 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் 10 எம்.எல்.ஏ.க்களும் தான் அவருடன் இருந்தார்கள். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தோம் .அதற்கு முன் அவர் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சர் ஆகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். ஆனால் அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை. கட்சிப் பதவியை வியாபாரமாக கருதினார். அவரிடம் துரோகம் மனப்பான்மை தான் உள்ளது. அ.தி.மு.க. தலைமை நிலைய அலுவலகத்தை டெம்போ வேனில் வந்து உடைத்தார். அம்மா இருந்த அறையை அடித்து நொறுக்கினார்.இப்படி கட்சிக்கு துரோகம் செய்தவருடன் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்? அ.தி.மு.க. தலைமைக்கு விசுவாசமாக இல்லாத ஒருவருடன் இணைய முடியுமா? தொண்டர்களேநீங்கள் சொல்லுங்கள். யார் கட்சிக்கு விசுவாசமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியும் .நான் 1974 ஆம் ஆண்டு முதல் அடிபிறழாமல் அ.தி.மு.க.வில் தொண்டனாக இருந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் ஓ.பி.எஸ். அப்படி அல்ல. ஜெயலிதா போடி தொகுதியில் போட்டியிட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக பணியாற்றியவர் ஓ பன்னீர்செல்வம். அதனால் தான் தொண்டர்கள் அவர் செய்தது துரோகம் என்கிறார்கள். இப்படி துரோகம் செய்தவருடன் எப்படி இணைய முடியும்? பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு திட்டமிட்டு அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார். எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்கக்கூட முடியாது என்று உறுதி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, முன்னாள் எம்.பி. டி.ரத்தினவேல், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்டத்தின் சார்பில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டம் நடந்த இடத்தில் உச்சி வெயில் கொளுத்தியது. கொளுத்தும் வெயிலையும் பொருட்டுத்தாமல் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu