உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
X

உச்சநீதிமன்றம் பைல் படம்.

அ.தி.மு.க. அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வருகிறது.கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த போது ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு இரு தரப்பினரையும்விரட்டி அடித்து அலுவலகத்திற்கு பூட்டு போட்டார். மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பூட்டப்பட்ட அலுவலகத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு ஒ.பி.எஸ்.தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!