ஜெ பாணியில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்

ஜெ பாணியில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்
X
இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே ஜெ ஸ்டைலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய ஓபிஎஸ், இபிஎஸ்

2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக இருந்தது. இடதுசாரிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதுகூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட விருப்பம் தெரிவித்த இடங்களில், அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அதிர்ந்தனர் கம்யூனிஸ்ட்டுகள்.

தேமுதிக தலைமையில் மூன்றாம் அணி அமைக்க முயற்சி செய்தனர். அப்போது விஜயகாந்த் அதனை மறுத்து , அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக ஆனது.

கம்யூனிஸ்ட்களுக்கு அதிமுகவால் நேர்ந்த அவமானத்தை போலவே, தற்போது பாஜகவுக்கு நேர்ந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது

பாஜக வலிமையாக உள்ள கொங்கு மண்டலம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு மேயர், பேரூராட்சி, நகராட்சிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக கோரியது. .கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள நிலையில், முடிந்தவரை அதிக இடங்களை கேட்டு பெற பாஜக முயற்சித்தது தவறில்லை. ஆனால், பாஜக கேட்கும் இடங்களை கண்ணை மூடிக்கொண்டு தர அதிமுக கொஞ்சமும் தயாராக இல்லை.

என்னதான் பாஜக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்களுக்கு தான் பலம் அதிகம் என்று அதிமுக கெத்து காட்டி வருகிறது.

இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, 2011 சட்டமன்ற தேர்தலின்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆன நிலையை நினைவு படுத்துகிறது.

தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், எப்படி வேட்பாளர் பட்டியலை ஜெ வெளியிட்டாரோ, அதே பாணியில் தற்போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, வேட்பாளர் பட்டயலை ஓபிஎஸ் -இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.

அதிமுகவின் இந்த அதிரடி நடவடிக்கையால், கூட்டணியில் பாஜகவின் நிலை என்ன? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என பாஜக இருக்குமா? அல்லது மத்தியில் ஆட்சியில் உள்ளதால் வேறுவித நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்

Tags

Next Story
ai in future agriculture