நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ஓபிஎஸ்?

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ஓபிஎஸ்?
X

ஓபிஎஸ் (பைல் படம்)

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 8 மணிக்கு செய்திளாயர்களை சந்திக்க உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் பணிகளை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் நடந்து வரும் அரசியில் குழப்பங்கள் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ஓபிஎஸ் தலைமையில் ஒரு தரப்பினரும், ஈபிஎஸ் தலைமையில் ஒரு தரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!