உதகையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனி தாக்கம்

உதகையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனி தாக்கம்
X

உதகையில், வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உள்ள புல்வெளிகள் மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா பயணிகள். 

உதகை நகரில் பல பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது; 0° வெப்பம் நெருங்குவதால் கடுங்குளிர் நிலவுகிறது.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நகரில் தலைக்குந்தா, அரசு தாவரவியல் பூங்கா, எச் பி எஃப், உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பசேலென காட்சியளிக்கும் மைதானங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல், உறை பனி படர்ந்து காணப்படுகிறது.


கடந்த மூன்று நாட்களில் 5, 2 என வெப்பநிலை இருந்து வரும் நிலையில் இன்று ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது மேலும் 0 டிகிரியை வெப்பம் நெருங்குவதால் கடும் குளிர் நிலவுகிறது இதனால் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நெருப்பை மூட்டி உறை பணியை சமாளித்து வருகின்றனர்.

குறிப்பாக தலைக்குந்தா பகுதியில் O செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது இதனால் இதுவரை இல்லாத கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அதிகாலை வேளையில் பணியை மேற்கொள்ளும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


அதே சமயம் புல்வெளிகளில் படர்ந்து இருக்கும் உறை பனியை காண, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை புரிந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags

Next Story