தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் வண்ண கோலப்போட்டி

தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் வண்ண கோலப்போட்டி
X
தைத்திருநாளை முன்னிட்டு இன்ஸ்டாநியூஸ் மற்றும் பெண்டகன் இணைந்து நடத்தும் மாபெரும் வண்ண கோலப்போட்டி

திருநாள் என்றாலே வாசலில் வண்ணக்கோலம் இடுவது தமிழரின் பாரம்பரியம். அதுவும் தைத்திங்கள் பொங்கலன்று வீட்டு வாசலில் பல்வேறு வகையான கோலமிட்டு அதனை வர்ணங்கள் கொண்டு அலங்கரிப்பது என்பது பெண்களுக்கு கைவந்த கலை.

தான் வரைந்த கோலத்தை அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என நாம் நினைப்போம். அதுவும் நம் கோலம் நன்றாக இருக்கிறது என ஊரில் பேசிக்கொண்டால் நமக்கு து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தைத் திருநாளை முன்னிட்டு நமது இன்ஸ்டாநியூஸ் மற்றும் பெண்டகன் தரமேலாண்மை நிறுவனம் இணைந்து நடத்தும், மாபெரும் கலர்புல் கோலப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாருங்கள்! உங்கள் இல்லங்களின் முன்பு உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கி வரையும் கோலங்களை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.

சிறந்த முதல் மூன்று கோலங்களுக்கு முத்தான மூன்று பரிசுகளும், அடுத்த பத்து கோலங்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும்.

ஆன்லைனில் அனுப்பும் முறை:

உங்கள் வண்ண கோலங்களை புகைப்படமாக எடுக்கவும்.

அதனை கீழ உள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : Apply Online

உங்கள் கோலங்களை 17.01.2022 தேதிக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். 14,15,16ம் தேதிகளில் போடப்படும் கோலங்களை படம்பிடித்து அனுப்புங்க. பரிசுகளை வெல்லுங்க.

Tags

Next Story
ai based agriculture in india