அன்புதான் வாழவைக்கும் என்று ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் சுரேஷ் சந்திரா பிறந்த நாளின்று
நடுத்தர குடும்பத்து வீட்டில் வளரும் அந்த இளம் மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.'பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அம்மா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. "வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்" என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.
"கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்" தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அம்மா.நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. "விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?" என்ற அம்மான் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு.
"நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?" என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் 'வெல்கம்' என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன. "யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?" என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே "நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?" என்று கேட்டார். "இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்" குழம்பி நின்றான் மகன். "என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்" என்றார்.ஆக.. அம்மாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்.
அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.அப்பேர்பட்ட அம்மா கண்டிசனில் வாழ்ந்து தான் பயணிக்கும் ஒவ்வொரு பாதையையும் நேர் செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் பட்டியலில் இருப்பவர்தான் சுரேஷ் சந்திரா. இவர் இருப்பதென்னவோ இரும்பு மனங்கள் கொண்டவர் மட்டுமே உலாவும் சினிமா தொழில்தான் என்றாலும் இவருக்கு மட்டும் இரட்டை மனசுண்டு.. அந்த இரண்டு மனசிலும் இடம் பிடித்த பட்டியலில் நம் ஆந்தை குழுவுக்கும் ஓரிடமுண்டு என்பதுதான் ஹைலைட்
உண்மையில் சுரேஷ் சந்திராவின் அப்பா கல்லூரி பேராசிரியர், அம்மாவும் பேராசிரியை.. அதனால் ஒழுக்க முறையுடன் ஊட்டியில் கல்வியை முடித்தவர் ஜர்னலிஸ்ட் ஆக வேண்டுமென்றுதான் விரும்பினார். இடையில் ஜஸ்ட் டைம் பாஸூகாக டாக்டர் ராஜசேகர் & விஜய்சாந்தி படங்களின் புரொமோசன் ஒர்க்கைப் பார்த்து கொண்டிருந்தார்.. அதை அடுத்து கோல்டன் ஈகிள் டிவி சேனல் (முருகன் IAS) நிர்வகிச்சு வந்த -பின்னாளில் விஜய் தொலைக்காட்சியான டிவி-யின் புரொமோசன் மேனேஜராக இருந்தார். அங்கே சுரேஷ் சந்திரா அசிஸ்டெண்டாக இருந்தவர்தான் விஜய் டிவி-யை விஸ்வரூப சேனலாக மாற்றியமைத்த மகேந்திரன் என்பவர்(இவர் கமல் நிழலாக இருந்தாராம்).
ஒரு கட்டத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் மேனேஜராகி அவர் உடன் பிறவா சகோதரனாகிப் போனார். அச்சூழலில்தான் டி ஒன் என்ற பீ ஆர் கம்பெனியையும் ஆரம்பித்து தென்னிந்தியாவின் டாப் 5 புரொமோசன் கம்பெனிகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்.கூடவே சோ ஸ்விட் என்ற பெட் அனிமல் க்ளினிக், பெட் அனிமல்களுக்கான பார்லர்& ஷோ என்று இன்னொரு ட்ராக்கிலும் பயணிக்கும் சுரேஷ் சந்திரா-வினால் கோலிவுட் டையும் தாண்டி பயனடைந்தோர் பட்டியல் மிக மிக நீளமாக்கும்..
இப்போது கோலிவுட்டையும், தாண்டி பாலிவுட்டிலும் பாய்ச்சல் காட்ட (தொடர்ந்து) முயன்று வரும் சுரேஷ் சந்திரா மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமென இன்ஸ்டா செய்திகுழுமம் அவா கொள்கிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu