அரிசிக்கொம்பனுக்கு எதிராக ஒரு புறம் போராட்டம் இன்னொரு புறம் ஆதரவு
லாரியில் ஏற்றப்பட்ட அரிசிக்கொம்பன் யானை.
அரிசிக்கொம்பனுக்கு யானைக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டமும் கேரளாவில் ஆதரவு அலையும் வீசி வருகிறது.
அரிசிக்கொம்பனுக்கு.. இந்த பெயரை கேட்டாலே தேனி மாவட்டம் மேகமலை, கம்பம், போடி, சின்னமனூர் பகுதி மக்கள் இன்னும் வீதியில் உள்ளனர். அத்தகைய கொடூரமான ஒரு யானை அரிசிக்கொம்பனுக்கு. கேரள காடுகளில் வளர்ந்து வந்த இந்த அரிசிக்கொம்பன்யானை அம்மாநிலத்தில் 10க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்து விட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
அது வனப்பகுதியில் சுற்றி திரிந்தால் மட்டும் பரவாயில்லை. வனத்தை ஒட்டிய ஊருக்குள்ளும் புகுந்து மக்களை அடித்து துவஷம் செய்ததால் தான் அரிசிக்கொம்பன் ஒரு மோசமான யானை என்ற பெயருக்கு காரணமாக அமைந்தது. கடந்த ஒரு மாத காலமாக தேனி மாவட்டத்தில் கண்டவர்களை எல்லாம் அடித்து தாக்கி காயப்படுத்தி வந்த அரிக் கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் உச்சகட்டமாக மக்கள் வெளியில் வராமல் இருப்பதற்காகவும், அரிசிக்கொம்பன் யானையை பிடிப்பதற்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இந்த நிலையில் தான் நேற்று காலை சின்னமனூர் அருகே அரிக்கொம்பன் யானை இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இதனால் தேனி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர். அரிசிக்கொம்பன் இனி பிரச்சினை வராது என்று நம்பி உள்ளனர். இங்கு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்தில் விடலாம் என முடிவு செய்யப்பட்டு லாரியில் ஏற்றி வனத்துறை அதிகாரிகள் அங்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போலஅரிசிக்கொம்பன்சுற்றும் சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. நெல்லை மாவட்ட வனப்பகுதியில் அரிசிக்கொம்பனைவிட்டால் அது எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் வனத்தில் இருந்து தப்பி வந்து ஊருக்குள் புகுந்து எங்களை அச்சுறுத்தும் எனக் கூறி நெல்லை மாவட்ட மக்கள் குறிப்பாக களக்காடு முண்டந்முறை பகுதி சேர்ந்த மக்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.அரிசிக்கொம்பன்யானை வந்த வாகனத்தை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இது ஒருபுறம் இருக்க கேரளாவை பூர்வீகமாக கொண்ட அந்த யானையை கேரள மாநிலத்தின் பூம்பாறை பகுதி மக்கள் இன்னும் நேசித்து வருகிறார்கள். அவர்கள் எங்கள் மாநிலத்திற்கு சொந்தமான அரிசிக்கொம்பன் யானையை எங்கள் நாட்டின் வனப்பகுதியிலேயே விழ வேண்டும் எனக் கூறி அரிசிக்கொம்பனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி உள்ளனர்.
இதனால் அரிசிக்கொம்பனுக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டமும் இன்னொரு பக்கம் ஆதரவும் பெருகி வருகிறது. இந்த சூழலில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் யானைக்கு சாதகமாக உள்ள இடத்தில் அதனை கொண்டு விடுவதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது என்று கூறி பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu