சுதந்திர தினத்தில், தமிழகத்தில் 19 கைதிகள் விடுதலை
Independence Day, 19 prisoners were released- தமிழகத்தில், சிறையில் இருந்த 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். (கோப்பு படம்)
Independence Day, 19 prisoners were released- சுதந்திர தினத்தை முன்னிட்டு, நன்னடத்தை அடிப்படையில், தமிழகத்தில் சிறைக்கைதிகள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக சிறைகளில் 66 சதவீதம் தண்டனை அனுபவித்த 19 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 10 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 4, திருச்சி மத்திய சிறையில் இருந்து 3, வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 என 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து நேற்று ஒரேநாளில் 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் நீண்டகாலம் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினவிழாவின்போது நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சுதந்திர தினமான நேற்று, 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர் 4 பேர், திருச்சி 3 பேர், வேலூர் சிறையில் இருந்து 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் ஊர்களுக்கு சென்றனர்.
கடந்த ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். தற்போது 19 பேர் விடுதலையாகி உள்ளனர். இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் மட்டும் 79 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை கைதிகள் விடுதலை குறித்து, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி கூறுகையில், ‛‛கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்கூட்டியே விடுவிக்கப்படுகின்றனர். அதன்படி தண்டனை காலத்தில் 3 ல் 2 பகுதியை அனுபவித்தவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியும். இருப்பினும் இத்தகைய விடுதலை என்பது கொடூரமான குற்றங்களில் தண்டனை பெற்று வந்த கைதிகளுக்கு பொருந்தாது'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu