ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது: பயணிகள் அதிர்ச்சி
பைல் படம்
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்றோடு தொடர் விடுமுறை (ஆயுத பூஜை) நாட்கள் முடிய உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதமும் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu