தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 34 ஆக திடீரென அதிகரிப்பு
X
By - B.Gowri, Sub-Editor |23 Dec 2021 10:30 AM IST
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒன்றில் இருந்து 34 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் அறிகுறி இருந்தவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேலும் 33, பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, இவ்வாறு அதிகரித்துள்ளது. 34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றில் முதல் நிலை பாதிப்பு மட்டும் தான் உள்ளது. தலை சுற்றல் போன்ற சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே உள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 26, பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் 4, திருவண்ணாமலையில் இருவர், சேலத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ள்ளார்.
இதன் மூலம், நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 269, ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64, ஆகியவற்றுக்கு அடுத்ததாக, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu