/* */

சென்னையில் அக். 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி எம்.பி., ஆலோசனை

சென்னையில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள ‘மகளிர் உரிமை மாநாடு’ குறித்து கனிமொழி எம்.பி., தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னையில் அக். 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி எம்.பி., ஆலோசனை
X

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மகளிர் அணி முன்னெடுக்கும் ‘மகளிர் உரிமை மாநாடு’ திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், கனிமொழி எம்.பி. தலைமையில் ‘மகளிர் உரிமை மாநாடு’ ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், தலைமைக் கழக செய்தி தொடர்பு அணித் தலைவர் இளங்கோவன், திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ மற்றும் திமுக மகளிர் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, திமுக தலைவர் ஸ்டாலினின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Sep 2023 2:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...