பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி:  பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு
X
விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 1,000 ஆசிரியர்களை இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது, மாணவர்களின் விடைத்தாள்களை சரியாகத் திருத்த வேண்டும் என அந்தப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி வருகிறது. ஆனாலும், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் வெளியான பின்னர் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுகிறது.

இதனால் மாணவர்கள் பலர் தங்களின் விடைத்தாள்களை, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் சூழல் உண்டாகிறது. இதன் காரணமாக, மதிப்பெண்ணில் மாற்றங்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணியில், ஆசியர்கள் சிலர் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும், திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், சிலர் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாமல் கவனக்குறைவாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு தேர்வுத்துறை பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த ஆசிரியர்கள் மீது தற்போது வரை பள்ளிக் கல்வித்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் விரைவில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது.

இதில் பொதுத்தேர்வுகளைக் கண்காணிப்பது, அதன் பிறகு நடைபெறும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளிலும் கடந்தாண்டு அலட்சியமாக செயல்பட்ட ஆயிரம் ஆசியர்களை ஈடுபடுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil