தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பைல் படம்
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது தோல்வியல்ல, எச்சரிக்கை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. பத்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்ற காங்கிரஸை போல சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது. இது தான் இன்றைய தேர்தல் முறையில் வெற்றி தோல்விகள் அமைகின்றன.
இதில் உண்மை நிலை என்னவென்றால் இன்றைய தேர்தல் முறையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள்.
இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது. எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது. ஆனாலும் இது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும். கீழே உள்ள அட்டவணை காங்கிரஸ் - பா.ஜ.க.வின் பலத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu