'ஒரு ரூபாயை கூட கைப்பற்றவில்லை' -கோவையில் எஸ்.பி. வேலுமணி பேட்டி

ஒரு ரூபாயை கூட கைப்பற்றவில்லை -கோவையில் எஸ்.பி. வேலுமணி பேட்டி
X

எஸ்.பி. வேலுமணி.

'ஒரு ரூபாயை கூட கைப்பற்றவில்லை' என்று கோவையில் முன்னாள் அமைசசர் எஸ்.பி. வேலுமணி அளித்த பேட்டியில் கூறினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 58 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சோதனை நிறைவு பெற்ற நிலையில் எஸ். பி. வேலுமணி கோவையில் சற்று நேரத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய என்னை போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீது குறிவைத்து தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது .எனது வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

அன்றும் சரி இன்றும் சரி ஒரு ரூபாயை கூட அவர்கள் கைப்பற்றவில்லை. இதுபோன்ற சோதனைகள் நடத்தி அ.தி.மு.க.வை அழிக்க முடியாது .எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே ஸ்டாலினின் அரசியல் காழ்ப்புணர்ச்சி எடுபடாது என்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி