கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை
திருச்செந்தூர் கோவில் - கோப்புப்படம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் என்ன சத்திரமா? தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் புகைப்படங்கள் கூட எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர். கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி . திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதித்தனர்.
இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணுவதற்காக பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்வதைத் தடை வித்தித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனாலும், திருப்பதி கோவிலில் மொபைல் போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பதில்லை, அதேபோல் தமிழக கோவில்களிலும் கட்டணம் வசூலிக்காமல் போன்களை வைக்க வசதி செய்து தர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu