ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை -மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நேற்று வரை சென்னை ஐஐடி வளாகத்தில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 32 நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஐஐடி வளாகத்தில் தற்போது மொத்த பாதிப்பு 111 ஆக உயர்ந்துள்ளது. ஐஐடி வளாகத்தில் 7490 பேர் உள்ள நிலையில் 3080 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 111 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
2018 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு வசதிகள் உள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை, 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்த்துவதற்கான வாய்ப்பில்லை. பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் முகக்கவசம் அணிந்து கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். கோடை காலங்களில் மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது, என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu