விபத்து ஏற்பட்டும் குரூப்- 1 தேர்வெழுதிய நபர்

நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத வந்த மாணவன் இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் காயமடைந்த மாணவன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வுகள் இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு இருந்த நிலையில் 388 பேர் மட்டுமே தேர்வை எழுதி வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மற்றும் மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதனிடையே குரூப் 1 தேர்வெழுத வந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும் போது, விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்வு மையத்திற்கு வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா காயமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு தேர்வு எழுதி முடிக்கும்வரை மாணவனுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!