நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆளுனர் பாராட்டு

நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆளுனர் பாராட்டு
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்ததற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டி தமிழக ஆளுனர் நற்சான்று வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-18 ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூபாய் 43 லட்சத்து 12 ஆயிரத்து 400 நிர்ணயிக்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 64 லட்சத்து 10 ஆயிரத்து 392 வசூல் செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ. 20 லட்சத்து 97 ஆயிரத்து 992 அதாவது 148.65 சதவீதம் அதிகமாக வசூலித்ததற்காக தமிழக ஆளுனரின் நற்சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!