தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 4 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மயிலாடுதுறை ,காரைக்கால் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை தேடி வருகிறார்கள். எந்த வழக்கு தொடர்பான சோதனை என்பது குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu