தமிழகத்தில் 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
X
தமிழகத்தில் 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். முதல் முறையாக காதிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 2ஆம் கட்டப் பணிகள் 2026க்குள் நிறைவு பெறும். தமிழகத்தில்தான் அதிக அளவிலான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.த17,899.17 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Tags

Next Story
ai marketing future