செப்டம்பர் 1-ல் அரசு பள்ளிகளை திறக்க தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

செப்டம்பர் 1-ல் அரசு பள்ளிகளை திறக்க தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்
X

செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை நேரடி வகுப்புகளுக்காக திறக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!