இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்ஸ்🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்ஸ்🔥
X

சினிமா கிசு கிசு

முன்னொரு கால லேடி சூப்பர் ஸ்டாரா இருந்த நாயகி நயன்தாரா இயக்குனர் மிலிந்த் ராய் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடிச்சிருக்கார்.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிச்சிருக்குது. நடிகர் அஜ்மல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி கொரிய மொழியில் வெளியான ப்ளைண்டர் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி இருக்குதாம்.

இதுலே நயன் முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிச்ச படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செஞ்சுதாம். அதன்படி நெட் பிளிக்ஸில் ஆரம்பிச்ச பேச்சு வார்த்தை ஜி 5 வரைக்கும் நடந்துச்சாம்.. ஆனா இவிய்ங்க சொன்ன ரேட்-டைக் கேட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் போனவங்க போனவய்ங்களாவே ஆயிட்டாங்களாம்

ஆனாலும் சற்றும் மனம் தளராத ரவுடி பிக்சர்ஸ் டீம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் தீவிர பேச்சுவார்த்தை நடந்து 20 கோடி ரூபாய்க்கு டீல் பேசி முடிக்கப் பட்டதாவும். நயன்தாராவின் சம்பளத்தை தவிர்த்து வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ஓடிடி ரைட்ஸ் மட்டும் 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு . நயனின் திரைப்படங்களிலேயே அதிக லாபத்தை கொட்டிக்கொடுத்த படம் இதுவே அப்ப்டீன்னு செய்தியைப் பரப்ப ஒரு டீமை ரெடி பண்ணி தீயா வேலை செய்ய வச்சிருக்குதாம்

Next Story
ai in future education