ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
X

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்களால் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்பட்டது. கொரோனாவால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கருணாநிதி பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து அதே நாளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பைஇன்று முதல் (15ம் தேதி ) அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது!

Tags

Next Story