தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும் செந்தூர், தேஜஸ் ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும் செந்தூர், தேஜஸ் ரயில்கள் இயக்கம்
X

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் இயங்கி வந்த ரயில் சேவைகள், பயணிகள் வரத்தின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது செந்தூர், தேஜஸ் உட்பட சிறப்பு ரயில்களின் இயக்கம் ஜூன் 16 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 10 ஆம் தேதி முதல் துவங்கி தமிழகத்தில் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில் சேவைகள் மட்டும் இயங்கி வந்த நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் வருகை குறைவாக காணப்படுவதால் ரயில்களின் இயக்கமும் குறைக்கப்பட்டது.

அந்த வகையில் தெற்கு பகுதிகளில் இருந்து இயங்கி வந்த செந்தூர், தேஜஸ், அந்தியோதியா உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட ரயில்களில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன்1 ஆம் தேதிக்கு மேல் ரயில்களில் பயணிகளின் வருகை அதிகரித்ததால், சில சிறப்பு ரயில் சேவைகள் மட்டும் மீண்டுமாக துவங்கியது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு வீதம் தற்போது குறைந்து வரும் காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள், ஜூன் 16 ஆம் தேதி முதல் மீண்டுமாக துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் இன்று (ஜூன் 14) முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டுமாக துவங்க உள்ளது. அதன் படி சென்னை எழும்பூரில் இருந்து தென்னக மார்க்கமாக இயக்கப்படும் தேஜஸ், செந்தூர், மன்னார்குடி, சோழன், ராமேஸ்வரம் உள்ளிட்ட அதிவேக ரயில்கள் ஜூன் 16 முதல் மீண்டுமாக இயக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி, மன்னார்குடி, கொல்லம், குருவாயூர் உள்ளிட்ட 47 ரயில்களின் இயக்க நேரத்தை மாற்றி, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story