தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது

தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது
X

மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. தற்போது இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளராக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் . இவர் செய்த பல சாதனைகள் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தது. மேலும் தற்போதைய கால கட்டத்தில் இந்திய இளைஞர்களின் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் அப்துல் கலாம் அவர்கள். இவர் கடந்த ஜூலை 25, 2015 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது உயிரிழந்தார். இது இந்திய நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தற்போது இவரது பெருமையை போற்றும் வகையில் தமிழக அரசு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது விருதிற்கு தகுதி உடையவர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

அதன் முதற்கட்டமாக தமிழக அரசு அப்துல் காலம் விருது பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பணிகளை விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த விருதினை பெறுபவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்க பதக்கம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story
Weight Loss Tips In Tamil