தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
X

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.

அழகு நிலையங்கள், சலுான்கள் குளிர்சாதன வசதி இல்லாமல், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில், காலை 6:00 முதல், 9:00 மணி வரை நடைபயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள், 'பம்பு செட்' பழுது நீக்கும் கடைகள், காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை; கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை செயல்படலாம்.

'டாஸ்மாக்' கடைகள், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்டு.

மிக்சி கிரைண்டர், 'டிவி' போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள்; மொபைல் போன் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், காலை 9:00 முதல், பகல் 2:00 மணி வரை செயல்படலாம்.

இன்று முதல் டீ கடைகள், காலை 6:00 முதல், மாலை 5:00 மணி வரை, 'பார்சல்' முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மக்கள் பார்சல் முறையில் டீ வாங்க வரும் போது, பாத்திரங்களை கொண்டு வந்து பெற்று செல்ல வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளில், டீ பெறுவதை தவிர்க்கவும்.

கடைகளின் அருகே நின்று, டீ குடிக்க அனுமதி இல்லை.

பேக்கரி உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவை, காலை 8:00 முதல், மதியம் 2:00 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி.

'இ - சேவை' மையம் பொதுமக்கள் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற, இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்கும்.

கட்டுமான பணிகள் மேற்கொள்ள, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துவதும் சிக்கலாக உள்ளது.

இதை கருத்தில் வைத்து, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

Next Story
Weight Loss Tips In Tamil