ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு 

ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி

1. வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் வழக்கமான நேரமான முறையே நடு இரவு 12.25 மணி, 12.55 மணிக்கு பதிலாக 5 நிமிடங்கள் முன்னதாக நடு இரவு 12.20 மணி 12.50 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையை அதிகாலை 03.15 மணி, 03.45 மணி, 04.15 மணிக்கு புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.15 மணிக்கு வருவதற்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு வந்து சேரும்.

2. வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நடு இரவு 12.05 மணிக்கும், மதுரையிலிருந்து அதிகாலை 01.15 மணிக்கும் புறப்படும்.

3. வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து வழக்கமான புறப்படும் நேரமான முறையே மாலை 06.50 மணி, இரவு 08.20 மணிக்கு பதிலாக மாலை 06.45 மணி, இரவு 08.10 மணிக்கு புறப்படும்.

4. வண்டி எண் 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.25 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 08.45 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 09.15 மணிக்கும்,

கடம்பூரிலிருந்து காலை 09.30 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 10.00 மணிக்கும்,

சாத்தூரில் இருந்து காலை 10.25 மணிக்கும், விருதுநகரில் இருந்து காலை 10.55 மணிக்கும், திருமங்கலத்தில் இருந்து காலை 11.15 மணிக்கும், திருப்பரங்குன்றத்தில் இருந்து காலை 11.30 மணிக்கும், மதுரையில் இருந்து நண்பகல் 12.05 மணிக்கும், சோழவந்தானில் இருந்து நண்பகல் 12.25 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து மதியம் 01.30 மணிக்கும் புறப்பட்டு கோயம்புத்தூருக்கு 08.20 மணிக்கு பதிலாக இரவு 07.00 மணிக்கு சென்று சேரும்.

5. வண்டி எண் 06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில் கொடைக்கானல் ரோட்டில் இருந்து மதியம் 02.05 மணிக்கு பதிலாக மதியம் 01.55 மணிக்கும், சோழவந்தானில் இருந்து மதியம் 02.10 மணிக்கும், மதுரையிலிருந்து மதியம் 02.40 மணிக்கும், திருப்பரங்குன்றத்தில் இருந்து மதியம் 02.53 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 03.25 மணிக்கும், சாத்தூரிலிருந்து மாலை 03.50 மணிக்கும், கோவில்பட்டியில் இருந்து மாலை 04.15 மணிக்கும், கடம்பூரில் இருந்து மாலை 04.40 மணிக்கும், திருநெல்வேலியிலிருந்து மாலை 06.05 மணிக்கும் புறப்படும்படியும் கால அட்டவணை மாற்றம் செய்யப்படுகிறது.

6. வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 07.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.05 மணிக்கு புறப்படும்.

7. வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டியிலிருந்து இரவு 09.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கும், சாத்தூரிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.05 மணிக்கும், விருதுநகரிலிருந்து இரவு 10.15 மணிக்கும் பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும்.

8. வண்டி எண் 02667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில் விருதுநகரிலிருந்து நடுஇரவு 12.55 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கும் மதுரையிலிருந்து அதிகாலை 01.50 மணிக்கு பதிலாக அதிகாலை 01.45 மணிக்கும் புறப்படும்.

9. வண்டி எண் 06867 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் கொளத்துரிலிருந்து இரவு 08.45 மணிக்கும், மணப்பாறையில் இருந்து இரவு 9 மணிக்கும், வையம்பட்டி யிலிருந்து இரவு 09.15 மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து இரவு 09.45 மணிக்கும், அம்பாத்துரையில் இருந்து இரவு 09.55 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து இரவு 10.05 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 10.20 மணிக்கும் புறப்பட்டு மதுரைக்கு இரவு 11.45 மணிக்கு வருவதற்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு வந்து சேரும்.

10. வண்டி எண் 02633 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 11.45 மணிக்கும், மதுரையிலிருந்து நடு இரவு 12.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 04.00 மணிக்கும் புறப்படும் படி கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரிக்கு காலை 06.25 மணிக்கு பதிலாக காலை 5.55 மணிக்கு சென்று சேரும்.

11. வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 06.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.00 மணிக்கும், செய்துங்கநல்லூர் இருந்து காலை 06.20 க்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து காலை 06.30 மணிக்கும், நாசரேத்தில் இருந்து காலை 06.43 மணிக்கும் குரும்பூரிலிருந்து காலை 06.51 மணிக்கும், ஆறுமுகநேரியில் இருந்து காலை 06.58 மணிக்கும், காயல்பட்டினத்தில் இருந்து காலை 07.05 மணிக்கும் புறப்பட்டு திருச்செந்தூருக்கு காலை 08.05 மணிக்கு பதிலாக காலை 08.00 மணிக்கு சென்று சேரும்.

12. வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து 08.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 09.00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து மாலை 04.20 மணிக்கும், விருதுநகரில் இருந்து மாலை 04.55 மணிக்கும், சாத்தூரிலிருந்து மாலை 05.15 மணிக்கும், கோவில்பட்டியில் இருந்து மாலை 05.40 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 06.40 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து இரவு 07.35 மணிக்கும் புறப்படும் படி கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

13. வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 08.20 மணிக்கு பதிலாக காலை 08.10 மணிக்கு புறப்படும்.

14. வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு புறப்படும்.

15. வண்டி எண் 02665 ஹௌரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 08.20 மணிக்கு பதிலாக காலை 08.10 மணிக்கு புறப்படும்.

16. வண்டி எண் 06787 திருநெல்வேலி - ஜம்மு கட்ரா மாதா வைஷ்ணவி தேவி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து மாலை 04.45 மணிக்கு பதிலாக மாலை 05.25 மணிக்கு புறப்படும்.

17. வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து நடுஇரவு 01.00 மணிக்கு பதிலாக நடுஇரவு 12.25 மணிக்கு புறப்படும்.

18. வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் வண்டி எண் 06065 தாம்பரம் - நாகர்கோயில் காலமுறை சிறப்பு ரயில்கள் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு புறப்படும்.

என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்