20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
X

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராகவும், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும், திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்:

நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் பி.நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக மாற்றம்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராக மாற்றம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக உள்ள கோவிந்தராவ் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.

கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராக மாற்றம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம்.

அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராக மாற்றம்.

சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் மாற்றம்.

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ் மாற்றம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லட்சுமிபிரியா நியமனம்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார் நியமனம்.

ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி நியமனம்.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம்.

மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலராக பாஸ்கர பாண்டியன் நியமனம்.

நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமனம்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி நியமனம்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி நியமனம்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக விஜயராஜ்குமார் நியமனம்.

பேரூராட்சிகளின் இயக்குநராக செல்வராஜ் நியமனம்.

எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக அஜய் நியமனம்.













Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்