வடபழனி முருகன் கோயில் அலுவல் சாரா தக்கார் ஆதிமூலம்

வடபழனி முருகன் கோயில் அலுவல் சாரா தக்கார் ஆதிமூலம்
X

பெரும்பாலானோருக்கு நல்லது செய்யும் வடபழனி முருகன் கோயில், அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் அலுவல் சார் தக்காரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அலுவல் சார் தக்காராக, கோவில் துணை ஆணையரே செயல்பட்டு வந்தார்.ஆனால் திடீர்னு கோயிலின் நிர்வாக நலன் கருதி, அலுவல் சாரா தக்காராக, 'தினமலர்' நாளிதழின் வர்த்தகப் பிரிவு இயக்குநரும், கோவை பதிப்பின் வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டதாகச் சொல்லி.இதற்கான உத்தரவை, அவரிடம், தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இது நடந்தது 2019 சனவரி 29 ஆம் நாள்..

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து வருது. மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் திமுக கட்சிக் கொடியில் தலைப்பு செய்தியை போட்டாலும் அடுத்தடுத்து டேமேஜான விமர்சனங்களை சொல்லிக்கிட்டே இருக்காய்ங்க

அப்படி இருந்தும் வட பழனி கோயில் தக்கார் பொறுப்பிலிருந்து ஆதிமூலத்தை நீக்காமல் தொடரச் செய்வதன் பின்னணி குறித்து இன்னொரு தினசரிக் குரூப் விசாரித்து வருதாம்.



Next Story
Weight Loss Tips In Tamil