இரண்டாம் தவணை நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்

இரண்டாம் தவணை நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்
X

தமிழகத்தில் இன்று முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொப்பை பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனை வீடுகளுக்கு நேரடியாக சென்று ஊழியர்கள் விநியோகம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000 + ரூ.2000) வழங்கப்படும் என்றும் ஒரு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2.11 கோடி அட்டைதாரர்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான டோக்கன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளில் நேரடியாக சென்று விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டோக்கன் விநியோகம் வரும் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தினசரி மாலை 5 மணிவரை ரேஷன் கடைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வரும் ௧௪ ம் தேதியுடன் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதனை நீட்டிப்பது குறித்து முதல்வர் அவர்கள் இன்று அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!