கன்ஷியாம் தாஸ் என்ற ஜி டி.பிர்லா காலமான தினமின்று!😢

கன்ஷியாம் தாஸ் என்ற ஜி டி.பிர்லா காலமான தினமின்று!😢
X

கன்ஷியாம் தாஸ் என்ற ஜி டி.பிர்லா 

டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, பிர்லா குழும நிறுவனர் கன்ஷ்யாம் தாஸ் பிர்லாஎன்ற ஜி டி.பிர்லா காலமான தினமின்று!😢

`நீ கோடீஸ்வரனா?' என்பதை நாம் எப்படிச் சொல்லுவோம்? ``நீ என்ன அம்பானியா, பில் கேட்ஸா?'' என்று கேட்போம். 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதை எப்படிக் கேட்பார்கள் தெரியுமா? `நீ என்ன டாடா, பிர்லாவா?' பணக்காரர் என்பதற்கே இலக்கணமாக இருந்த அவர்கள், டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, பிர்லா குழும நிறுவனர் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா (சுருக்கமாக ஜி.டி.பிர்லா

நம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்கள், ஜி.டி. பிர்லாவும், ஜாம்ஷெட்ஜி டாடாவும்தான். இன்றைய பிர்லா குழுமம் மிகப் பிரம்மாண்டமானது. நமக்குப் பரிச்சயமான பல முகங்கள் பிர்லாவுக்கு உண்டு. வான் ஹூஸன், லூயி பிலிப். ஆலன் ஸோலி, பீட்டர் இங்கிலாந்து ஆடைகள், பேண்ட்டலூன் கடைகள், ஐடியா செல்போன் சேவை, பிர்லா மியூச்சுவல் ஃபண்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், ஜூவாரி சிமெண்ட், 1957 முதல் 2014 வரை வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட அம்பாசிடர் கார், ஏராளமான தமிழக மாணவர்கள் படிக்கும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (சுருக்கமாக பிட்ஸ்). இவை தவிர, அலுமினியம், செம்பு, கெமிக்கல்கள், காகிதம், விஸ்கோஸ் நூல் இழைகள் எனப் பல்வேறு துறைகளில், 40 நாடுகளில் 200 க்கும் அதிகமான பிர்லா குழும நிறுவனங்கள். இந்த விருட்சங்கள் அத்தனைக்கும் வித்திட்டவர் பிர்லா.

பல தடைகளைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் வாங்கியது.

அது மட்டுமல்லாமல் சிமென்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள், தகவல் தொழில்நுட்பத் துறை என அனைத்து நவீன துறைகளிலும் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது. 1942-ல் இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்கும் எண்ணம் கொண்டார். அடுத்த ஆண்டே யுனைடெட் கமர்ஷியல் வங்கி (தற்போதைய யு.கோ. வங்கி) கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டில் ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கினார். 1964-ல் பிலானியில் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கினார். இந்நிறுவனம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்கி இலவசமாகக் கல்வி வழங்கியது.

புதுதில்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளைப் பளிங் குக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோயில்களை பிர்லா குடும்பத்தினர் அமைத்துள்ளனர். ஏராளமான அறிவியல், ஆன்மிக, கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களையும் நிறுவினார்.

1957-ல் பத்ம விபூஷண் விருது கிடைத்தது. தன் சுய முயற்சியால் மகத்தான சாதனைகளை செய்து இந்தியாவின் தொழில் துறையை முன்னேறச் செய்த ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா 1983-ம் ஆண்டு இதேந் ஜூன் மாதம் 11ம் தேதி 89-வது வயதில் காலமானார்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!