கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் இருந்தால் என்ன செய்யலாம்?

கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் இருந்தால் என்ன செய்யலாம்?
X

கடைகளில் வாங்கும் பொருள் கலப்படம் மற்றும் காலாவதியானதாக இருந்தால் என்ன செய்யலாம்?

இந்தியாவில் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை பொதுமக்கள் அணுகும் எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்

நாம் கடைகளில் அதிகமாக பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் உணவு, சமையல் பொருட்கள் போன்றவைகள் பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அதை வாங்கி பயன்படுத்தும் போது அது எப்போது தயாரிக்கப்பட்டது? அதில்என்ன மூலப்பொருட்கள், கிளை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்ட வேண்டும். இதன் படி அனைத்து உணவு பொருட்கள் பாக்கெட்டின் மீதும் அவை தயாரிக்கப்பட்ட தேதி, கலந்துள்ள பொருட்கள் போன்றவை இடம் பெற வேண்டும் என்பது விதிமுறை.

இந்த உணவு மற்றும் பாதுகாப்பு தர சட்டத்தின் முக்கிய நோக்கம் தயாரிக்கப்பட்ட தேதி, அளவு, கலந்துள்ள பொருட்களை அறிந்து மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது தான். மேலும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்கும் போது அரசு அங்கீகாரம் அளித்த ISI முத்திரையை பார்த்து வாங்குவது அவசியம். காலாவதியான பொருட்களை விற்பனை செய்தாலோ, தரம் குறைந்த மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு மற்றும் தரம் 2006 சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் வாங்கும் பொருள் கலப்படம் செய்யப்பட்ட பொருளாகவே அல்லது காலாவதியான பொருளாக இருந்தால்9444042322 என்ற எண்ணிற்கு உணவு பாதுகாப்பு மட்டும் தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

நீங்கள் வாங்கும் உணவு பொருளையும், அதன் பாக்கெட்டையும் புகைப்படம் எடுத்தும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.

மேலும் unavupukar@gamil என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பலாம்.

TNLMCTSம் என்ற மொபைல் செயலி மூலம் கடையின் பெயர், உணவு பொருள் அது பற்றிய உங்கள் புகாரை ஆடியோ அல்லது வீடியோவாகவும் பதிவிடலாம்.

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு