தமிழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமி நியமனம்

தமிழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமி நியமனம்
X

தமிழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசுத்துறைகளில் பணியாற்றும் IAS, IPS அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யயப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய ஊழல் தடுப்பு அதிகாரியாக டிஐஜி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்சென்னை காவல் இணை ஆணையர் லட்சுமி திடீரென்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு, தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். எனினும், இதுவரை இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், உயர் காவல் துறை அலுவலர்களும் இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்பப்பெற வற்புறுத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிச்சு வந்த நிலையில் தற்போது அவருக்கு போஸ்டிங் போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக தலைமையிலான அரசு, நிர்வாகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல அரசு மற்றும் காவல் துறைகளில் IAS, IPS அதிகாரிகளாக பணியாற்றிய பலர் இடமாற்றமும், பணி மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், காத்திருப்பு பட்டியலில் இருந்த அதிகாரி லட்சுமி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக அவர் விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை அவர் திரும்ப பெற்றுக்கொண்டதை தொடர்ந்து டிஐஜியாக புதிய பதவியில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி