தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு ?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு ?
X

தமிழகத்தில் ஜூன் 14ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இதனால் ஊரடங்கில் அமலில் உள்ள தளர்வுகள் அனைத்தும் ஜூன் 7 முதல் 14 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை 5 மணிவரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜூன் 14 ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அவ்வாறு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டு உள்ள வருமான இழப்பை சரி செய்யும் நோக்கில் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்திலும் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் அண்டை மாநிலங்கள் சென்று மது வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளும் நடைபெற்றது. தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல். மேலும் புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

Next Story
Will AI Replace Web Developers