/* */

உயிருக்கு போராடும் மூத்த பத்திரிகையாளர் - போலீஸ் கமிஷனரிடம் உதவி கேட்டு மனைவி கண்ணீர் கடிதம்

உயிருக்கு போராடும்  மூத்த பத்திரிகையாளர் - போலீஸ் கமிஷனரிடம்  உதவி கேட்டு மனைவி கண்ணீர் கடிதம்
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ.வில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர்: அவருடைய மனைவி பிரேமா போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் உதவி கேட்டு கண்ணீர் கடிதம்!

மாலைமுரசு குழுமத்தில் நீண்டகாலம் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன் ( 69). மாலை முரசு நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் இருந்து எழுதிவந்தார். இவருடைய படைப்புகளை விகடன் குழுமம் வெளியிட்டுவந்தது.

இந்தநிலையில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ரவீந்திரன் கொரோனா தொற்றுக்கு ஆளானார். மயிலாப்பூரில் உள்ள புனித இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மே 22ஆம் தேதி அதே மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இன்று(09.06.21) வரை அதே பிரிவில் தான் உள்ளார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ரவீந்திரன் தன் ஓய்வு கால பாதுகாப்புக்காக தன் சேமிப்பு தொகை 7.5 லட்சத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார். வாடகை வீட்டில் இருந்து அடிக்கடி மாறி அவதிப்பட்டார்.

இந்த தொகையை பயன்படுத்தி 5 ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் லீசுக்கு குடியேறலாம் என்று திட்டமிட்டு, 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பள்ளிக்கரணை அருகே சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்த வி.சங்கர் என்பவரின் வீட்டை பேசி அவரிடம் ரூ 7.5 லட்சத்தை கொடுத்தார். சங்கர் வாக்குறுதி கொடுத்தபடி வீட்டையும் தரவில்லை , ரொக்கமாக வாங்கிய ரூ 7.5லட்சம் பணத்தையும் கொடுக்கவில்லை. இதையடுத்து 15 .11. 2019 அன்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து பல மாதங்கள் ஆகியும் பிரச்சினை தீராததால் மூத்த பத்திரிக்கையாளர்கள் பாரதி தமிழன், அசதுல்லா ,பக்கிரியப்பன் ஆகியோர் உதவியுடன் அப்போது சென்னை மாநகர ஆணையாளராக இருந்த ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்து முறையிட்டார்.

இதையடுத்து சங்கரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் , மூன்று லட்சத்தை வழங்கிய சங்கர் ஒரு மாதத்தில் பாக்கி 4.5 லட்சம் வழங்கி விடுவதாக உறுதி அளித்தார். ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சங்கர் பணத்தை கொடுக்கவில்லை. தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி ரவீந்திரன் வென்டிலேட்டரில் உள்ளார்.

அவருடைய மனைவி 61 வயதாகும் பிரேமா கண்ணீரும் கம்பலையுமாக ஒரு பக்கம் கணவரை நினைத்து இன்னொரு பக்கம் பணத்துக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தங்கள் பணம் ரூ 4.5 லட்சத்தை வி.சங்கரிடம் இருந்து பெற்றுத் தரும்படி சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் முறையிட்டுள்ளார்.

(திருமதி.பிரேமா ரவீந்திரன் எண்: 9940688544).

Updated On: 9 Jun 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு