தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.
கோவிட் தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், தமிழ் மொழி இல்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்,இதனை தொடர்ந்து 'கோவின்' இணையதளத்தில் தமிழையும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில், 12வது மொழியாக கோவின் இணைய தளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ள கோவின் இணையதளத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 2,89,96,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 4.5 கோடி பேருக்கு இரண்டு தவனை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu