முகக் கவசம், சானிடைசர் - விலை இதுதாங்க..! தமிழக அரசு நிர்ணயம்

முகக் கவசம், சானிடைசர் - விலை இதுதாங்க..! தமிழக அரசு  நிர்ணயம்
X

மக்கள் அனைவரையும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேவைப்பட்டால் மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து இக்காலகட்டத்தில் மாஸ்க், கிருமிநாசினி போன்ற பொருட்களின் விலை கடும் உச்சம் அடைந்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமாக பயன்படும் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட 15 பொருட்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்தது. மேலும் அதற்கான விலை உச்ச வரம்பையும் தமிழக அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி என்-95 மாஸ்க் அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது. பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயம் செய்துள்ளது.சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என அத்யாவசியமான 15பொருட்களின் விலையினை தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil