/* */

தேர்தல் முன்விரோதம் -அதிமுக பிரமுகர் கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்

தேர்தல் முன்விரோதம் -அதிமுக பிரமுகர் கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்
X

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி கடை செயல்பட்டு வந்தது தற்போது கொரோனா முழு ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் நுழைந்த திமுக வாடிப்பட்டி இளைஞரணி செயலாளர் அசோக் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பட்டாகத்தி சகிதம் வந்து பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கிவீசியும், அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி வாசலில் நின்ற இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு டூவிலரில் மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாடிப்பட்டி போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி தப்பியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது பூட்டிய பேக்கரி கடையை பட்டாகத்தியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 6 Jun 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’