விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றது

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றது
X

வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் 

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இந்த வேளாண் சட்டங்கள் இயற்றி சனிக்கிழமையோடு ஒரு வருடம் ஆகியுள்ளது அதை துக்க நிகழ்வாக கருதி புதிய வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றது

நெல்லை மாநகரம் மேலபாளையம் மண்டல அலுவலகம் அருகில் சனிக்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாகுழு உறுப்பினர் கருணா தலைமையில் புதிய வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது, இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்.கண்டன உரை நிகழ்த்தினார். பாளை இந்தியன் வங்கி முன் நடந்த இயக்கத்திற்கு வி.ச.மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில் இயக்கம் நடந்தது,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன்,மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ்,பாளை தாலுகா செயலாளர் ராஜகுரு,மாவட்டக்குழு உறுப்பினர் வரகுணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலகுழு உறுப்பினர் பூ.கோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!