பாளை. மத்திய சிறை- முத்துமனோ கொலை வழக்கில் புதிய திருப்பமாக ஜெயிலர் சன்முகசுந்தரம் இடைநீக்கம்

பாளை. மத்திய சிறை- முத்துமனோ கொலை வழக்கில் புதிய திருப்பமாக ஜெயிலர் சன்முகசுந்தரம் இடைநீக்கம்
X

பாளை. மத்திய சிறையில் நடந்த முத்துமனோ கொலை வழக்கில் புதிய திருப்பமாக இன்று இரவு ஜெயிலர் சன்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை முத்து மனோ கொலையுண்ட சம்பவத்தில் பணியில் அஜாக்ரதையாக செயல்பட்ட 6 சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1. துணை ஜெயிலர் சிவன்.

2. உதவி ஜெயிலர் கங்காதரன்

3. உதவி ஜெயிலர் சங்கரசுப்பு

4. உதவி ஜெயிலர் ஆனந்தராஜ்

5. தலைமை வார்டன் வடிவேல் முருகையா

6. சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட். இன்று ஏழாவது நபராக ஜெயிலர் சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 42 நாட்கள் ஆகியும் இறந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்