கேதார்நாத்சிங் வழக்கு தீர்ப்பின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு.

கேதார்நாத்சிங் வழக்கு தீர்ப்பின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு.
X

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் அரசுகள் மீதான விமர்சனங்களே தேசவிரோத குற்றங்கள் ஆகாது என்ற கேதார்நாத்சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 1962-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கேதார் நாத்சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தேசத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவைதான் தேசதுரோக சட்டத்தின் கீழ் வரும். அப்படி எதுவும் இல்லாதவை தேசதுரோக சட்டத்தின் கீழ் வராது என குறிப்பிட்டிருந்தது.

இதனைத்தான் இன்று வினோத் துவா வழக்கிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா முன்வைத்த மற்றொரு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்பது வினோத் துவா கோரிக்கை. இதனை மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்

Next Story
ஆஃபிஸில் வேலை செய்யும்போது தூக்கம் வருதா..? இந்த  விஷயங்கள் இனி ஃபாலோ பண்ணுங்க..!